தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரிக்கு டி.ராஜேந்தர் மனு

79

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தின் தனி அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தார்.

அதில் கூறியிருப்பதாவது:-

நான் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ள 1303 உறுப்பினர்களில் 1050 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது 400-க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்பது தெரியவருகிறது.

300-க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவை கட்டவில்லை எனவும், கட்ட தவறினால் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே தொடர்பு கொள்ள முடியாதவர்களுக்கு சந்தாவை செலுத்தி ஓட்டு போட்டு இருப்பதாக தெரிய வருகிறது. இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்து அறிய இது தொடர்பான ஆவணங்களை எனக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.