எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிவு அறிவிப்பேன்: ரஜினி தடாலடி

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி பேச்சு

14

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயாலாளர்களுடன் இன்று விவாதித்தார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் ராகவேந்திரா மண்டபத்தில்  கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளுடன் நடந்தது. அனைவரும் முககவசம் அணிந்திருந்தனர். ரஜினியும் முககவசம் அணிந்திருந்தார்.

 

கூட்டம் சுமார்  ஒரு மணி நேரம் நடந்தது. அதில் அரசியல் பற்றி மனதில் உள்ளதை வெ:ளிப்படுத்திய ரஜினி,  அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் முடிவு செய்கிறேன் என்றதுடன் சில நிர்வாகிகளின் செயல்பாடு பற்றி கண்டிப்பு தெரிவித்தார்.

 

பின்னர் அவர் வீடு திரும்பினார். அவரிடம் அரசியல் நிலைப்படு குறித்து கேட்டனர்.

அதற்கு பதில்; அளித்த  ரஜினிகாந்த்த், ;நான் வந்து என்னுடைய அரசியல் நிலைப்பாடு பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கிரம் சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.