டிரிபிள்ஸ் அனுபவங்கள் பகிர்ந்த வாணி போஜன்

19

 

தமிழ் டிஜிட்டல் உலகில் கடந்த மாதம் தனது விநியோக பரப்பை அழுந்த பதித்த
Hotstar Specials தமிழில் தனது முதல் முக்கிய காமெடி தொடரான “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரை டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட் ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப் படுகிறது.
மூன்று நண்பர்களின் மறக்கவியலாத பயணத் தின் கதையே இத்தொடர்.

தனது திறமை மிகு நடிப்பாலும் அழகாலும் இளம் நெஞ்சங்களை வென்றிருக்கும் நடிகை வாணி போஜன் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் பங்குகொண்ட தனது இனிய அனுபவங் கள் குறித்து பகிர்ந்துகொண்டதாவது:
“ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரில் எனக்கு மிகவும் பிடித்தி ருந்தது இயக்குநர் சாரு கேஷின் ன் அயராத உழைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமையும் மிக கச்சித மாக இருக்க வேண்டு மென கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளார். பல காட்சிகளில் என்னை அணுகி வித்தியாசமான உணர்வுகளை தரும்படி கேட்டார். இப்போது திரை யில் பார்க்கும்போது அது வெகு அழகாக வந்துள்ளது. “நீ என் கண்ணாடி” பாடலுக்கு கிடைத்து வரும் பாராட்டுக் களும், வரவேற்பும் அதனை உறுதிப்படுத்துவ தாக உள்ளது. “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடர் மிக மகிழ்ச்சியான அனுபவமா கவும், நிறைய கற்றுக் கொள்ள உதவியாகவும் இருந்தது . நடிகர் ஜெய் சம்பத் மிக எளிமையான வராகவும், நட்புடன் பழகக் கூடியவராகவும் இருந்தார். படக்குழுவில் அனை வருடனும் சரிசமமாக பழகி இயல்பாக வைத்துக் கொண்டார்.

“ட்ரிப்ள்ஸ்” இணைய தொடர் காமெடியில் கலக்கும் அதே நேரம் அழகான காதலும், உணர் வுகளும் கொண்டிருக்கும். இத்தொடர் பங்குகொண்ட அனைத்து நடிகர்கள் அனைவரின் திறமையில் சிறந்ததை முழுமையாக வெளிக்கொண்டுவந்துள்ளது. Disney Hotstar VIP மற்றும் கார்த்திக் சுப்பு ராஜ், ஜெய் போன்ற மிகப்பெரும் பெயர்கள் சம்பந்தபட்டுள்ள இந்த இணையதொடரில் நடிகராக பங்குகொண் டதில் நான் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு வாணி போஜன் கூறினார்.

வயிறு குலுங்க வைக்கும், அட்டகாச காமெடியை Hotstar Specials வழங்கும் “ட்ரிப்ள்ஸ்” இணைய தொடரில் டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் கண்டுகளி யுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.