காதல் மர்மம் கொலை பின்னணியில் 40 பேர் கூட்டாக தயாரித்துள்ள படம்

16

காதல், மர்மம், கொலை பின்னணியை கொண்ட கதையம்சத்துடன் ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. படத்தின் பெயர், ‘கருப்பங்காட்டு வலசு.’ கதாநாயகனாக நடித்து இருப்பவர், எபிநேசர் தேவராஜ். நீலிமா இசை, ஆரியா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். செல்வேந்திரன் டைரக்டு செய்து இருக்கிறார். இவர் கூறியதாவது:-

“இந்த படத்தை 40 பேர்கள் சேர்ந்து கூட்டாக தயாரித்து இருக்கிறோம். பல்லடம் அருகே மாதபூர் கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தி, முழு படத்தையும் 21 நாட்களில் முடித்து விட்டோம். முற்றிலும் வித்தியாசமான கதை, இது. ஒரு கிராமத்தில் வசிக்கும் பள்ளி ஆசிரியர், பச்சக்கிளி வாத்தியார், ஆட்ட தளபதி. ஊர் திருவிழாவின்போது இவருடைய ஆட்டத்தைப் பார்க்க 18 கிராமத்து மக்களும் ஆவலுடன் வருவார்கள்.

பச்சைக்கிளி வாத்தியாரின் அக்கா, 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சாதிக்கலவரத்தில் இறந்து போனாள். அதனால் அக்கா மகள் மல்லி மீது பச்சக்கிளி வாத்தியார் உயிராக இருக்கிறார். இந்த நிலையில், அந்த கிராமத்தை நாகரீகமாக மாற்ற முயற்சிக்கிறார், முன்னாள் ஊர் தலைவரின் மகள் காந்திமதி. இதற்கு சில பணக்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

என்றாலும் காந்திமதி தன் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதற்கிடையில், ஊர் திருவிழா நடக்கிறது. அதில் 4 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளி யார், கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடிக்க மாரி ஜார்ஜ் வருகிறார். அவர் கண்டுபிடித்தாரா? என்பது உச்சக்கட்ட காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது.”

Leave A Reply

Your email address will not be published.