ஏதென்ஸ் விமான நிலையத்தில் தீபிகா படுகோனேவுக்கு சிலை

14

இந்தியில் ஒரு படத்துக்கு ரூ.13 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் தீபிகா படுகோனே. தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். ஏதென்ஸ் நகரில் தீபிகா படுகோனேவுக்கு சிலை வைத்து கவுரவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது ஏதென்சில் வெளிநாட்டு பயணிகளுக்கு அங்குள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. பயணிகளை வரவேற்கும் வகையில் ஏதென்சில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உலக மக்களின் நிஜமான புன்னகைகள் என்ற தலைப்பில் கண்காட்சியும் நடந்து வருகிறது.

இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் பிரபலமாக உள்ளவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்தியா சார்பில் தீபிகா படுகோனே சிலை வைத்துள்ளனர். கருப்பு நிற மார்பிள் கல்லினால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சிலையின் கீழ் இந்தி நடிகை ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கிறார் என்ற வாசகம் உள்ளது. இந்த சிலை புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஏற்கனவே லண்டனில் உள்ள மேடம் துஸ்ட் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனேவின் மெழுகு சிலை உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.