வில்லி வேடத்தில் சிம்ரன்

17

இந்தியில் அயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வசூலும் குவித்தது.

இந்த படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை ஆகிய 3 தேசிய விருதுகளும் கிடைத்தன. அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் வாங்கி இருக்கிறார்.

இதில் பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் திடீரென்று விலகியதால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை எடுத்த ஜெ.பிரட்ரிக் இயக்குகிறார்.

இந்தியில் தபு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தமிழில் தபு வேடத்தில் நடிக்க நடிகை தேர்வு நடந்தது. வில்லி என்பதால் பலர் தயங்கினர். தற்போது சிம்ரன் தேர்வாகி இருக்கிறார்.

அவர் கூறும்போது ‘தபு வலிமையான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவரது வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த படத்தில் என்னை வேறு கோணத்தில் வித்தியாசமாக பார்க்க இருக்கிறேன்’ என்றார்.

Simஅந்தாதுன் தெலுங்கு ரீமேக்கில் நிதின் நாயகனாகவும் தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும் நடிக்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.