கருப்பங்காட்டு வலசு (பட விமர்சனம்)

19

படம்: கருப்பங்காட்டு வலசு

நடிப்பு: அரியா, நீலிமா மாரி செல்லதுரை, ஜார்ஜ் விஜய் நெல்சன்

தயாரிப்பு: க்ரூ 21 எண்டர்டெயின்மெண்ட்

இசை: ஆதித்யா சூர்யா

ஒளிப்பதிவு:ஷ்ரவன் சரவணன்

இயக்குனர்: செல்வேந்திரன்

தமிழ்கத்தின் ஒரு குக்கிராமாக உள்ளது கருபங்காட்டு வலசு. 300 பேர் மட்டுமே வசிக்கும் அந்த கிராமத்தில் எந்த வசதியும் இல்லாமல் பின்தங்கி இருக்கிறது. அந்த கிராமத்து கழிப்பறை முதல் கணினி வசதி உள்ளிட்ட எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி நவீன கிராமமாக மாற்ற முயல்கிறார் ஊர் தலைவர் மகள் நீலிமா. அதை சிலர் எதிர்க்கிறார்கள். இந்நிலையில் கிராமத்தில் 4 பேர் ஒரே நாளில் மர்மமாக இறக்கின்றனர். இதையடுத்து கதை கிரைம் த்ரில்லராக மாறுகிறது. அவர்கள் 4 பேரும் எப்படி இறந்தார்கள் என்பதை கிளைமாக்ஸ் சொல்கிறது.

கிராமத்து பின்னணி கதை என்றதும் கிராமத்து காதல் முறை மாமன் சீர் என்று செல்லும் என எண்ணி அரங்கிற்குள் சென்றால் அதை அப்படியே துப்பறியும் கிரைம் கதையாக மாற்றிப்போடிருக்கிறார் இயக்குனர். இது சுவராஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.

ஊர் தலைவரின் மகளாக வரும் நீலிமாவுக்கு முக்கிய வேடம். கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவராக வருகிறார். ஆனால் ஊர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அவர் வாதாடும் காட்சிகளில் மிளிர்கிறார்.கூத்து கலைஞ்ராக வரும் எபினேசர் தேவராஜ் நடிப்பு குறிபிடும்படி உள்ளது.அரியா மற்றும் மஆரி செல்லதுரையின் நடிப்பும் ஓ கே ரகம்.

கிராமத்து கதை போர்வையில் பல விஷயங்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன்.  கிரைம், ஆணவகொலை. ஊர் நற்பணி என பல விஷயங்களை ஒன்றடக்கி கமர்ஷியல் படமாக்க பெரும் முயற்சி எடுத்துள்ளார். இசையும் ஒளிப்பதிவும் கதைக்கு கைகொடுக்கிறது.

கருப்பங்காட்டு வலசு- ஓ கே

Leave A Reply

Your email address will not be published.