மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ்

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட இயக்குனர் இயக்குகிறார்

14

நடிகர் தனுஷ் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில்  கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் படம் வெளியாக உள்ளது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ஏற்கனவே ராஞ்சனா படத்தில் அறிமுகமான தனுஷ் தற்போது மீண்டும் இந்தியில் அடராங்கி ரே படத்தில் நடித்து வருகிறார்.

2018ம் ஆண்டு ’தி எக்டார்டினரி ஜெர்னி ஆஃப் தி ஃபக்ரி’ என்ற ஹாலிவுட் படத் தில் நடித்தார். தற்போது அவென்சர் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் படங்களை இயக்கிய ரூஸ்ஸோ பிரதர்ஸ் (அந்தோனி ரூஸோ-ஜோ ரூஸோ) இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் தனுஷ். தி கிரே மேன் என்று இப்படத் துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.