முன்னால் பேச தைரியமில்லாத கோழைகள்.. கவர்ச்சி நடிகை ஷகீலா தடாலடி பேச்சு

25

கவர்ச்சி நடிகை ஷகீலா தனது வாழ்க்கையை புத்தகமாக எழுதி வெளியிட் டார். அதை தழுவி ஷகீலா வாழ்க்கை வரலாறு படம் ஷகீலா என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.   ஷகீலா வேடத்தில் இந்தி  நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். மேலும் பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.
ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித் துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். இந்திரஜித் லங்கேஷ் இப்படத் தை எழுதி இயக்குகிறார்.
இப்படத்தின் டிரெய்லர் நேற்று சென்னைபிரசாத் ஸ்டுடியோவில் வெளியிடப்பட்டது. அதற்கான மீடியாக்கள் சந்திப்பில் நடிகை ஷகீலா கலந்துக்கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:
நான் எழுதிய எனது வாழ்க்கை வரலாறு புத்தக்கத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள் ளது. சிலவற்றை படத்துக்காக மாற்றி இருக்கிறார்கள். என் வாழ்கையில் நடந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதி உள்ளேன். இதில் எனக்கு என்ன பெருமை என்றால் நான் உயிரோடு இருக்கும்போதே எனது வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வெளியாகிறது என்பதுதான். இந்த படத்தில் ராஜீவ் பிள்ளை முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக் கிறார். என் வாழ்க்கையிலும் அந்த பாத்திரம் முக்கியமா னது. என்னைப்பற்றி பலர் பலவிதமாக பேசுகிறார்கள்.

நான் வாழ்க்கையில் சில தவறுகள் செய்தேன் அந்த தவறை மற்ற பெண்கள் செய்து ஏமாந்துவிடக்கூடாது என்பதைத்தான் எனது புத்தகம் வெளிப்படுத்தும் கருத்தாக சொல்லப்பட்டது எனக்கு வலி ரணம் எவ்வளவு இருந்திருக் கும் என்கிறார்கள். எனக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி நான் கவலைப்பட்ட தில்லை எனக்கு முன்னால் பேச யாருக்கும் தைரியம் இருந்ததில்லை. அவர்கள் கோழைகள்.
இவ்வாறு ஷகீலா பேசினார்.

இதில் நடிகர் தம்பி ராமையா பேசும்போது,’ஷகீலா வாழ்க் கை படமாகும் அளவுக்கு அவர் வளர்ந்திருக்கிறார். இதற்கு பின்னால் அவரது வேதனைகளும் வலியும் ரணமும் எவ்வளவு இருந்தி ருக்கும் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் அவர் இறந்து பிறகு உருவானது. ஆனால் உயிரோடு இருக்கும் போதே ஷகீலா வாழ்க்கை உருவாகி இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை தரும். மாஸ்டர் படம் வெளியானால்தான் தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு மும்பே ஷகீலா படம் வெளியாகி தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் வர வாய்ப்பு ஏற்பட் டுள்ளது’ என்றார்.
இயக்குனர் பிரவின்காந்தி பேசும்போது,’ஷகீலாவை. மலையாள திரையுலகிலிருந்து கடப்பாரை, மம்முட்டி எல்லாம் முயற்சி செய்தார்கள். ஷகீலாவை மந்திரவதிகளை மாந்திரீகம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்றார்.
ஷகீலா படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

Leave A Reply

Your email address will not be published.