தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க புதிய தலைவர்?

விரைவில் தேர்வு

12

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக செயல்பட்டு வந்தார் டி.ராஜேந்தர். அவர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளுர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தகள் சங்க தலைவராக இருக்கும் நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இது குறித்து அச்சங்கம் சார்பில் செயலாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக  டி.ராஜேந்தர் நீடிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்த சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார்.
மேலும், அந்த சங்கத்தின் By Law விதிமுறைகளுக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தின் பேரில் வேறு சங்கங்களில் பதவி வசிக்க முடியாத சூழலின் காரணமாக இன்று தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினரா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவரை சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி விரைவில் அறிவிக்க உள்ளோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் செயலாளர் JSK சதீஷ்குமார்கூறிஉள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.