ஜிம்னாஸ்டிக் மாணவ-மாணவிகளுடன் கின்னஸ் சாதனை நாயகன் ஆன நடிகர் கோல்நாத்

கே.எஸ்.ரவிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து..

17

மானாட மயிலாட டிவி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு டி வி ஷோக்கள் மூலம் பிரபலம் ஆனவர் கோகுல்நாத். இவர் அம்புலி, ஆஹா, ஜம்புலிங்கம் 3டி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சென்னை விருகம்பாக்கத்தில் குட்டா என்ற நடன மற்றும் ஜிம்னாஸ்டிக் பள்ளி நடத்துகிறார். ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம், இடுப்பில் வளையம் சுழற்றுதல், கால்களில்  வளையம் சுழற்றுத்தல், நடனம் போன்ற கலைப் பயிற்சி அளிக்கிறார்.

சமீபத்தில் கோகுல்நாத் மற்றும் அவரது மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 14 பேர் ஜிம்னாஸ்டிக் செய்தபடி இடுப்பு, கால் மற்றும் தலைகீழாக நின்றபடி பாதம் ஆகியவற்றில் வளையம் சுழற்றுதல் போன்றவற்றை ஒரு நிமிடத்தில் அதிகம் செய்துகாட்டி  கின்னஸ் சாதனை நிகழ்த்தி இருக்கின்றனர்.

இதில் கோகுல்நாத் நோஸ் ஹூப்பிங் உள்ளிட்ட 4 கலைகளில் சாதனை நிகழ்த்தி 4 கின்னஸ் சான்றிதழ் பெற்றி ருக்கிறார். மேலும் மாணவர் கள் சாஜன், எஸ்.டி.திவாகர், பயிற்சியாளர் கே.நாகராஜ், மாணவிகள் ஆண்ட்ரியா வர்கிஸ், எஸ். ரியானா ஆண்ட்ரியா, ஏ.எஸ்.ஐஸ்வர் யா, வைணவி சரவணன், எம்.சக்தி பூரணி, கரிமா பன்சாரி, எம்.வி.திவினா ஸ்மிரிதி, வி.மோனிஷா, ஜே.ஜெஸ்ஸிகா. லக்‌ஷிதா ராஜேஷ் ஆகியோர் கின்னஸ் சான்றிதழ்கள் பெற்றனர். அவர்களுக்கு நடத்த பாராட்டு விழாவில் இயக்குனர் கே.எஸ். ரவிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டு பேசிய தாவது:
கோகுல்நாத்தை மானாட மயிலாட நிகழ்ச்சியிலிருந்தே எனக்கு தெரியும். அப்போதே அவர் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்வார். அடிக்கடி அவர் வீடியோக்கள் பதிவிடுவார். அதுவும் வித்தியாசமானதாக இருக்கும் இன்றைக்கு அவர் மட்டுமல்ல அவரது மாணவ, மாணவி களும் கின்னஸ் சாதனை செய் திருக்கின்றனர். இங்கு சிலம்பம் சுழற்றியதையும், ஜிம்னாஸ்டிக் செய்ததையும் பார்த்தபோது எனக்கு அந்த ஆசை வந்துவிட்டது. சிலம்பம் சுழற்றவும் ஜிம்னாஸ்டிக் கற்கவும் முடிவு செய்துள்ளேன். பெண்கள் உறுதியாக இருப்பதை கண்டால் எனக்கு பிடிக்கும். நான் சிறுவயதில் நீச்சல் பயிற்சி நிறைய செய்வேன். ஜிம்மானிஸ்டிக்கை இங்குள்ளவர்கள் 2 வருடமாக செய்கிறார்கள் என்றார்கள், என்னால் அவ்வளவு நாள் கற்க முடியாது 2 மாதத்தில் கோகுலிடம் கற்க விரும்புகிறேன்’ என்றார்.


திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:

அந்த காலத்தில் என் அப்பா இதுபோன்ற விளையாட்டு எனக்கு சொல்லித்தரவில்லை இன்றைக்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஜிம்னாஸ்டிக் போன்றவற்றை கற்க அனுப்பு வது பாராட்டுக்குறியது. முன்பெல்லாம் கின்னஸ் சாதனை செய்தவர்கள் பற்றி கேள்விப்படுவோம் அல்லது பத்திரிகையில் படிப்போம் ஆனால் இப்போது நம் பக்கத்து வீட்டு பிள்ளைகள் கின்னஸ் சாதனை செய்திருப் பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும் பெருமை யாகவும் இருக்கிறது. இத்தைய பயிற்சிகளை அளித்த கோகுல் நாத்தும் கின்னஸ் சாதனை செய்திருப்பது பாராட்டத் தக்கது’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.