பத்திரிகையாளர் கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக்..

புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்

19

நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்) இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘ருச்சி சினிமாஸ்’ & ‘பாஸ்ட் மெஸெஞ்சர்’ இணைந்து வழங்கும் பெயரிடப்படாத “Short Film No. 1” குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று வெளியாகிறது. சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை.

கதை நாயகியாக கயல்விழி நடிக்கிறார். ஜோயல் பென்னட், ‘திடீர் தளபதி’ சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, ‘ஒற்றன்’ துரை ஆகியோர் நடிக்கின்றனர்

ஒளிப்பதிவு மற்றும்  படத்தொகுப்பு அனிஷ் ஆஞ்சோ. இசை விசு.

விளம்பர வடிவமைப்பு எஸ் எம்பி கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ். செய்தி தொடர்பு யுவராஜ். தயாரிப்பாளர்: பி. சுமித்ரா. எழுத்து – இயக்கம்:
கோடங்கி ஆபிரகாம்.

Leave A Reply

Your email address will not be published.