ரஜினிகாந்த் குணம் அடைய கமல்ஹாசன் வாழ்த்து

16

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்றார். படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த்துக்கு கொரோன டெஸ்ட் எடுக்கப்பட்டதில் தொற்று இல்லை என்பது உறுதியானது. அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் அவருக்கு இன்று ரத்த அழுத்தம் ஏற்பட்டது. உடனடியாக ஐதராப்பாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் ரஜினிகாந்த் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமலிருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் ஆக இருந்தது. அவர்து உடல்நிலை தற்போது சீராக உள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.

ரஜினிகாந்த் விரைந்து குணம் அடைய வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் முதல்வர்  சந்திரபாபு நாயுடு. நடிகர் பவன்கல்யாண் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவரும் ரஜினியின் நண்பருமான கமல்ஹாசன் ரஜினி நலம் பெற வேண்டும் என்று டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.