தமிழக முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு

13

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் சந்தித்துப் பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் திரையுலகினர் வேண்டுகோள் வைத்தால் 100% இருக்கைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது ‘மாஸ்டர்’ படத்துக்காக 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் விஜய். அதற்குப் பரிசீலித்து முடிவு செய்வதாக உறுதி அளித்துள்ளார் தமிழக முதல்வர்.

Leave A Reply

Your email address will not be published.