ஈஸ்வரன் படம் சொன்ன தேதியில் வெளியாகும்.. பட அதிபர் ஜே எஸ் கே தகவல்..

13

சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். பொங்கல் தினமான ஜனவரி 14ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படம்பற்றி சில வதந்திகளை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது. அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட தரப்பினரிடமிருந்து   ஈஸ்வரன் படம் வெளியிட வேண்டுமென்றால் தங்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறதாம்.

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளரும், தயாரிப்பாளருமான ஜே எஸ்.கே சதிஷ்குமார் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ஈஸ்வரன் படம் சொன்னபடி தியேட்டரில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஆடியோ வருமாறு:

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தின் ஆடியோ வரும் 2ம் தேதி மாலை சென்னை அல்பட் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.