விஜய்சேதுபதி நடிக்கும் “மும்பைகர்” ஹிந்திப்படம்

13

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் லாரன்ஸ் நடித்த காஞ்சனா படம் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி பாம் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்காகி ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

தமிழில் வசூல் குவித்த  மாநகரம் படம் ஸ்ரீ, சந்திப் கிஷன் நடிப்பில் 2017-ல் ரிலீசானது. இந்த படத்தின் மூலம்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமாகி கார்த்தியின் கைதி, விஜய் நடித்துள்ள மாஸ்டர் படங்களை இயக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

மாநகரம் இந்தி ரீமேக்கில் நாயகனாக விஜய்சேதுபதியும்  விக்ராந்த் மாசேவும்  சந்தோஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.