உயர் நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசின் அறிவுறுத்தலையடுத்து திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி வாபஸ் கூடுதல் காட்சிகள் திரையிடலாம் என தமிழக அரசு உத்தரவு

13

உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலை பின்பற்றி திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அளித்த அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. 50 சதவீத பார்வையாளர்ளுக்கு மட்டுமே அனுமதி என்பதுடன் கூடுதல் காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு, பல்வேறு தளர்வுகளுடன் மாதந்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி நவம்பர் 10-ம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது.

நடிகர் விஜய் கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் சூழலில், திரையரங்க உரிமை யாளர்கள் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் முதல்வர் பழனி சாமியை சந்தித்து திரையரங்கு களில் 100 சதவீத பார்வையாளர் களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று 100 சதவீத பார்வையாளர்களை அனு மதிக்க கடந்த 4-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு மருத்துவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை திரும்பப் பெற வேண் டும் என மத்திய அரசும் வலியுறுத்தியது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும், உயர் நீதிமன்ற மதுரை கிளையும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டன.

இதையடுத்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்கள் ஒத்துழைப்பாலும் நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் நலன் கருதி..

திரையரங்குகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி திரையரங்குகள் 100 சதவீத இருக்கை பயன்பாட்டுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஜன.4-ம் தேதி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டும், திரைப்பட மற்றும் திரையரங்க தொழிலாளர்கள் நலன் கருதியும், மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதித் திருந்த போதிலும், சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போது மத்திய அரசின் அறிவுரை மற்றும் இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து திரையரங்குகளும் மறுஉத்தரவு வரும்வரை 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன் படுத்தி செயல்பட அனுமதிக்கப் படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கூடுதல் காட்சிகளை திரையிட்டுக் கொள்ள திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.