நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ நாளை மறுதினம் ரிலீஸ்

ஒரே தியேட்டரில்25 லட்சத்துக்கு டிக்கெட் புக்கிங்..

9

கடந்த 8 மாதமாக மூடிக்கிடந்து நவம்பரில் திறக்கப்பட்டு 50 சதவீத டிக்கெட்டுடன் மூச்சு விட்டுக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்க் ஆக்ஸிஜன் எத்தனை ஷோக்களை வேண்டுமானலும் திரையிடலாம் என்று அரசு அனுமதி கொடுத்ததால் தினமும் 5 காட்சிகள் திரயிடப்படுகிறது. 3 மணி நேர படம் என்பதால் தினமும் 15 மணி நேரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உலகம் முழுவதும் மீண்டும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலில் இறங்க.. இந்த முறை தமிழ்த் திரைப்படங்கள் அதிகமாக வெளியாகும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மீண்டும் லாக் டவுனை அறிவித்ததால் அங்கெல்லாம் ‘மாஸ்டர்’ படம் வெளியாகாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

சிங்கப்பூரில் முழு லாக்டவுன் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கே ‘மாஸ்டர்’ வெளியாக முடியவில்லை. மலேசியாவில் இன்னமும் தியேட்டர்கள் திறப்பு பற்றிய முடிவு அறிவிக்கப்படவில்லை.

இலங்கையிலோ தியேட்டர்களில் 25 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற உத்தரவால் அங்கும் வசூல் கிடைக்காத நிலைமை. இந்தச் சூழலில் வெளிநாட்டு உரிமையை வாங்கியவர்கள் பலரும் தாங்கள் கொடுத்தத் தொகையைப் பெருமளவு குறைத்துக் கொள்ளச் சொன்னதால், வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அதையும் ஏற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்தான் லலித்குமார் என்பதால் அவரது கடன் சுமையைக் குறைக்க வேண்டி நடிகர் விஜய் தன்னுடைய சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தைக் குறைத்துக் கொண்டாராம்.

700 திரைகளில் வெளியாகும் இப்படத்திற்கான டிக்கட்டுகள் முதல் ஐந்து நாட்களுக்கும்(மல்டிபிளக்ஸ்/மால் தவிர்த்து) பெரும்பான்மையான திரையரங்குகளில் ரசிகர் மன்றம் சார்பில் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
40 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து மாஸ்டர் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ள திரையரங்கு ஒன்றில் முதல் ஐந்து நாட்களுக்கு 25 லட்ச ரூபாய்க்கு விஜய் ரசிகர் மன்றம் அனைத்து காட்சிகளையும் ஒப்பந்தம் செய்துள்ளது. முதல் வாரம் சுமார் 60 கோடி ரூபாய் வரை மொத்த வசூலை மாஸ்டர் எட்டி பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.