தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு: ஈஸ்வரன் படத்தை ஓ.டி.டியில் வெளியிட மாட்டோம் பட நிறுவனம் அறிவிப்பு

12

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் அதே தேதியில் இந்தியாவுக்கு வெளியே ஓ.டி.டி தளத்திலும் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அறிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கூறும்போது, ”ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியாகும் அன்றே ஓ.டி.டியில் வெளியிடுவதாக அறிவித்து உள்ளனர். இதை ஆமோதித்தால் எல்லா படங்களும் இதுபோல் வந்து விடும். இந்தியாவுக்கு வெளியே திரையிட்டாலும் அது உடனடியாக இந்தியாவிலும் பிரதிபலிக்கும். எனவே ஈஸ்வரன் படத்துக்கு நமது ஒத்துழைப்பு இல்லை என்பதை தெரிவித்துக்கொள்ளும்படி திரையரங்கு உரிமையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார். தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை தொடர்ந்து ஈஸ்வரன் பட நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தியேட்டர் அதிபர்கள் கோரிக்கையை ஏற்று ஈஸ்வரன் படத்தை ஓ.டி.டியில் வெளியிடுவது இல்லை என்றும் படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் சங்கம் அதிக திரையரங்குகள் ஒதுக்கி ஆதரவு தரவேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.