சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 110

7

வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

வசந்த மாளிகை

இயக்கம்
கே. எஸ். பிரகாஷ் ராவ்
தயாரிப்பு
டி. ராமநாயுடு
விஜய சுரேஷ் கம்பைன்ஸ்
இசை
கே. வி. மகாதேவன்
நடிப்பு
சிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
பாலாஜி
பேபி ஸ்ரீதேவி

வி. எஸ். ராகவன்

வெளியீடு
செப்டம்பர் 26, 1972

நீளம்
4664 மீட்டர்
_________

படம் நவீன டிஜிட்டல் வடிவில் வெளிவந்து நூறு நாட்கள் ஓடியது

கலைஞர் செய்திகளில் வந்த பதிவு

நூறு நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘வசந்த மாளிகை’ : மறைந்தும் வாழும் நடிகர் திலகம்!
By Muthu Bagavath கோடிகளில் எடுக்கப்படும் பிரம்மாண்ட திரைப்படங்கள் கூட வெளியாகி சில தினங்களில் தடம் தெரியாமல் போய்விடும் நிலையில், 47 ஆண்டுகள் கழித்தும் மக்களால் கொண்டாடப்படும் திரைப்படம்‘வசந்த மாளிகை

அன்றைய காலத்திலேயே 750க்கும் மேற்பட்ட நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபமாக பழைய கிளாசிக் படங்களை டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியிட்டு வருகின்றனர். அப்படி சிவாஜியின் வசந்தமாளிகை திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஜூன் 21ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் வெளியாகி ஒரு நல்ல வசூலையும் பெற்றது. அன்றைய சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் கூட சிவாஜியின் நடிப்பை ரசிக்க வசந்த மாளிகை படத்தைப் பார்க்க திரையரங்கில் குவிந்தனர்.

காதலாகி, காதலால் உருகும் திரைப்படங்களின் பட்டியலில், வசந்தமாளிகையை தவிர்த்திட முடியாது.

இந்தப் படம் எல்லோர் மனதையும் வென்றதற்கு இரண்டு விஷயங்கள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். ஓர் அழகு தேவதை, ஆணின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறாள்… என்ன ஆனாலும் அவளையே நினைத்து உருகும் ஹீரோவின் மனநிலை மற்றும் காட்சிப்பொருளாக இல்லாமல் சுயமரியாதையும், நேர்மையும் கொண்ட வைராக்கிய பெண்ணாக நாயகி வாணி ஸ்ரீ… ஆரஞ்சு வண்ணப் பட்டுப்புடவையையும், வெளிர்நிற வெள்ளைக் கோட்டில் சிவாஜியையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.

இப்படியான, வசந்த மாளிகை பற்றிய மற்றுமொரு சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால், இப்படத்தின் ஒரிஜினல் 1971ல் வெளியான தெலுங்கு திரைப்படமான பிரேம நகர். இப்படமே தமிழில் ரீமேக்கானது. தவிர, படத்தின் கதையாசிரியர் கௌசல்யா தேவ் எனும் தெலுங்கு பெண் எழுத்தாளர். இதுமட்டுமல்ல, திரைக்கதை குறித்தும், சிவாஜி நடிப்பு குறித்தும் பேச எத்தனையோ விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. எனவே, வசந்த மாளிகை என்றென்றும் கிளாசிக் சினிமா தான்.

Leave A Reply

Your email address will not be published.