மக்களின் அன்பே மருந்து – கமல்

13

காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‛மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார்.

கமலுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து ஒன்றில் எலும்பு முறிவு ஏற்பட, அப்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் வலி இருந்த நிலையில், ஜனவரி,19 அன்று மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நடந்த இந்த அறுவை வெற்றிகரமாக நடந்ததாகவும், சிகிச்சைக்குப்பின், கமல் நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கமல் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. ராமச்சந்திரா மருத்துவமனை அணியினருக்கு நன்றி. காயம் ஆறும் வரை சமூக வலைதளங்கள் வழியாக உங்கள் இதயங்களுடன் உறவாடல் தொடரும். மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.