சினிமா பிட்ஸ்

17

விஜய்க்கு – திலீப் வாழ்த்து 

மலையாள நடிகர் திலீப், தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை பார்த்து, விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சுசீந்திரனின்  “குற்றமே குற்றம்”

சுசீந்தீரன் இயக்கும் படத்திற்கு “குற்றமே குற்றம்” என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஜெய்-ஸ்மிருதிவெங்கட் ஜோடியாக நடிக்கின்றனர்.

 

சூர்யா ஜோடியாக பிரியங்கா

பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். கிராமத்து கதையம்சத்தில் அதிரடி படமாக தயாராகிறது. இதில் சூர்யா ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். 

 

பிசாசு 2வில் காயத்ரி ரெட்டி

மிஷ்கின் இரண்டாம் பாகமாக பிசாசு 2 படத்தை இயக்க உள்ளார். இதில் ஆண்ட்ரியா, பூர்ணா நடிக்கிறார்கள். படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரில் நடிக்க காயத்ரி ரெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். வரும்  மே மாதம் இப்படத்தை  வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

பிரபுதேவா ஜோடியாக காஜல்

பிரபுதேவாவின் 50வது படமான “பொன்மாணிக்கவேல்” விரைவில் வெளியாக உள்ளது.  பிரபுதேவா நடிக்க கல்யாண் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்.

 

சந்தானம் நடிக்கும் “சபாபதி”

சந்தானம் தனது பிறந்த நாளை முன்னிட்டு “சபாபதி” என்ற படத்தில் நடிக்கிறார். சீனிவாசராவ் இயக்குகிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

 

                                                       

சிம்புவின் சூர்ய நமஸ்காரம்

நடிகர் சிம்பு காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5.30 மணிக்கே தயராகி சூர்ய நமஸ்காரம் செய்கிறார். வெளியூர் படப்பிடிப்பு என்றாலும், அதிகாலையிலேயே எழுந்து சூர்ய நமஸ்காரம் செய்வதுதான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்.

 

 சச்சுவின் அனுபவம்

கதாநாயகி, குணச்சித்திரம், நகைச்சுவை பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் கலக்கியவர் சச்சு. குமாரியாக அறிமுகமாக, குமரியாகவும், பாட்டியாகவும், மூன்று தலைமுறை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழ் உட்பட பல மொழிகளில், 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். 65 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பயணித்து வருகிறார்.

 

சாம் இயக்கத்தில் அதர்வா 

பிரமோத் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் அதர்வா  ஹீரோவாக நடிக்க சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இவர் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கூர்கா, 100 படங்களை இயக்கியவர்.

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா

சூர்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார் சிறுத்தை சிவா. இதற்காக அவரிடம் கதையை கூறியுள்ளார். சிவா தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.