சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 116

14

சிவாஜியின் ஆளுமை !

நடிகர் பிரபுவைப் பார்க்க பாலுமகேந்திரா ‘அன்னை இல்லம்’ சென்றிருந்தபோது, அப்போது நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட சிவாஜி பாலுமகேந்திராவிடம் கேட்டிருக்கிறார்.

‘ஏம்பா? என்னையெல்லாம் பாத்தா ஒனக்கு நடிகனா தெரியலியா?’

இதை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்த பாலு மகேந்திரா பின்னொரு சமயத்தில் சிவாஜி அவர்களை நடிக்க வைக்க எண்ணியபோது, அதை அவர் ஏற்க மறுத்திருக்கிறார்.

‘இந்தக் கிழவனவிட அந்த கெழவன் நடிச்சாதான் சரியா இருக்கும்’. அவர் சொன்ன கிழவர் சொக்கலிங்க பாகவதர். படம் ‘சந்தியாராகம்’.

நடிகன் என்கிற நிலையைத் தாண்டி கலைஞன் என்கிற இடத்தில் சிவாஜி கணேசன் என்னும் ஆளுமை உயர்ந்து நின்ற இடமது.

Leave A Reply

Your email address will not be published.