டெல்லி தெருவுக்கு சுஷாந்த் சிங் பெயர்

55

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஆண்டு திடீரென தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கு நடந்து வருகிறது. கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் சுஷாந்த். சுஷாந்த் சிங் நினைவாக பீகார் மாநிலத்தில் அவர் பிறந்த ஊரான புர்னியாவில் முக்கியமான சாலை ஒன்றுக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.

தற்போது அதே போன்று டெல்லியில் உள்ள ஆண்ட்ரூஸ் கன்ச் சாலைக்கு சுஷாந்த் சிங் பெயரை வைக்கவேண்டும் என்று அந்தப் பகுதி மக்களும், அந்த வார்டு கவுன்சிலரும் டெல்லி மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி தற்போது அதற்கு அனுமதி அளித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.