ரஹ்மான் ஹீரோவாக நடிக்கும் மலையாள படம் “சமரா”

இன்று தொடக்கம்

15

1983 ஆம் ஆண்டில் மலையாள படம் மூலம் திரைக்கு அறிமுகமான நடிகர் ரஹ்மான் 37 வருடங்களை கடந்து, இன்றும் ஓயிவில்லாத வகையில் தமிழ், மமலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார்.

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து பாத்திரங்களிலும் அற்புத நடிப்பை தரும் வல்லமை கொண்டவர் நடிகர் ரஹ்மான். தமிழில் ஹீரோவாக கலக்கியவர் தற்போது ஹீரோவாகவும், குணசித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் சார்லஸ் ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகும் “சமரா” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று குலுமணாலியில் துவக்கப்பட்டது.

மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட படைப்பான “பொன்னியின் செல்வன்” படத்தில் ஐதராபாத்தில் நடித்துகொண்டிருக்கும் நடிகர் ரஹ்மான், இன்று குலுமணாலியில் “சமரா” படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.திரில்லர் பாணி க்ரைம் படமாக இப்படம் உருவாகிறது. 15 நாட்கள் நடித்து விட்டு “பொன்னியின் செல்வன்” – ல் கலந்துகொள்கிறார்.

இது தவிர தமிழில் இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராம் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது . மேலும் அஹம்மத் இயக்கத்தில் அர்ஜுன், ‘ஜெயம்’ ரவி ஆகியோர் நடிக்கும் படமான ‘ ஜன கன மன ‘, விஷாலுடன் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களிலும் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் ஓய்வின்றி பிஸியான நடிகராக நடித்து வருகிறார் ரஹ்மான்.

Leave A Reply

Your email address will not be published.