எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி

அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார்

105

சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் இன்று( பிப்ரவரி 1ம்தேதி) மாலை 6 மணிக்கு சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடக்கிறது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைக்கிறார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் ராதிகா சரத்குமார், விஜய் சேதுபதி, விருகை வி.என்.ரவி எம் எல் ஏ,  எஸ்.சண்முக சுந்தரம் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். பெப்ஸி நிர்வாகிகள் மற்ற சங்கங்களின் நிர்வாகிகள் விழாவில் கலந்துகொள்கின்றனர். ஏ.சபரிகிரிசன் உரையாற்றுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.