“இனி ஒரு காதல் செய்வோம்” அஜய் பாலகிருஷ்ணா

9

எப்பிக் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் “இனி ஒரு காதல் செய்வோம்’. புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்வேதா நடிக்கிறார். வர்கீஸ் மேத்யூ, கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன், மனு பார்த்திபன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

குறும்பட உலகத்தில் இருந்து வரும் ஹரிஹரன் கதை எழுதி இயக்குகிறார். ரெஹானா, ஸ்ருதிஹாசன் போன்ற வெகு சில பெண் இசையமைப்பாளர்களின் வரிசையில் ரேவா எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கர்நாடக இசையை முறைப்படி பயின்ற இவர் சில மலையாள படங்கள் மற்றும் பல்வேறு விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதுகிறார். 90-களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலிக்கும் வண்ணம் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்கக் காதல் மற்றும் காமெடி கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வரும் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. படம் வரும் கோடைவிடுமுறையில் வெளியாகிறது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, புதுச்சேரி மற்றும் பெங்களூருவில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொடைக்கானல், தேனி, மூணாறு மற்றும் பல்வேறு இடங்களில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.