Cinema Bites

10

ஸ்பெயின் செல்லும் வலிமை படக்குழு

எச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். அவருடன் ஹூமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு, சுமித்ரா என பலர் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்பெயினில் ஒரு ஸ்டைலிஷான பைக்கை வைத்து நடக்கும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த காட்சி தான் அப்படத்தின் க்ளைமாக்ஸ் பைட் சீன் என்றும் சொல்லப்படுகிறது. இதற்காக வலிமை படக்குழு விரைவில் ஸ்பெயின் நாட்டிற்கு பறக்கிறது.

சொந்த குரலில் பாடிய வெங்கட் பிரபு, பிரேம்ஜி

மறைந்த நடிகர் பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, சீதா ஆகியோர் நடித்த படம் ‘ஆண்பாவம்.’ இந்த படத்தில், ‘‘காதல் கசக்குதய்யா’’ என்ற பாடல் காட்சி இடம்பெற்று இருந்தது. இதற்கு நேர்மாறாக, ‘‘காதல் இனிக்குதய்யா’’ என்ற பாடல், ‘சிதம்பரம் ரெயில்வே கேட்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை டைரக்டர் வெங்கட் பிரபுவும், அவருடைய தம்பி பிரேம்ஜியும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. சஸ்பென்ஸ், திரில்லர் பின்னணியில் உருவான இப்படம் முடிந்து, படத்தை வெளியிடும் பணிகள் நடக்கின்றன.  மார்ச் 5ம் தேதி  தியேட்டரில் வெளியிட உள்ளனர்.

டைடானிக் – காதலும் காமெடியும் 

பல படங்களை தயாரித்த சி.வி.குமார் தயாரித்துள்ள படம் ‘டைட்டானிக்’ (காதலும் கவுந்து போகும்). கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், ஆஷ்னா சவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். ஜானகிராமன் இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு மற்ற பணிகள் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.