இளையராஜாவின் பாடல்தான் “நவரசா” – கவுதம் மேனன்

11

மணிரத்னம்தயாரிப்பில் ஆந்தாலஜி தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்த கதைகளில் ஒன்றில் நடிகர் சூர்யா நடிக்க, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி வருகிறார். அந்த பகுதிகளின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி சி ஸ்ரீராம் பணியாற்றியுள்ளார். இந்த படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் கௌதம் மேனன் ‘இந்த படத்தில் அளவுக்கதிகமாக பேசப்படும் சமூகப் பொறுப்பு குறித்து கேலியான கதையை உருவாக்கியுள்ளேன். இளையராஜாவின் ஒரு பாடலை சுற்றிதான் படத்தின் கதை இருக்கும். அதற்காக அந்த பாடலைப் பயன்படுத்திக் கொள்ள அவர் அனுமதி அளித்தார்.’ எனக் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.