கௌதம் கார்த்திக் ஜோடியாக சுவாத்மிகா

10

நட்சத்திர தம்பதிகளான ஜீவிதா, ராஜசேகரின் இளைய மகள் சுவாத்மிகா கதாநாயகியாகிறார். நந்தா பெரியசாமி இயக்கும் புதிய தமிழ் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் சேரனும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். கார்த்திக் நடித்த வருஷம் 16 படம் சாயலில் இந்த படம் தயாராக உள்ளது. படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இவர்களுடன், டேனியல் பாலாஜி, சரவணன், விக்னேஷ், சிங்கம் புலி, ஜோமல்லூரி, கவிஞர் சினேகன், ஜாக்குலின், மவுனிகா, மைனா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். குடும்ப படமாக தயாராகிறது. சித்துகுமார் இசையமைக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.