தனுஷின் கர்ணன் ஏப்ரல் 9ல் திரையில்

40

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டார் தனுஷ். கர்ணன் படத்தை தியேட்டர்களில் பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் காதலர் தினத்தன்று கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கர்ணன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.