5 வருட ஆராய்ச்சிக்கு பிறகு உருவான ’மட்டி’ அதிரடி சகதி ரேஸ் திரைப்படம்

டீஸர் வெளியிட்டு இயக்குனர் பேச்சு

33

இந்தியாவில் சில மாநிலங்களில் நடக்கிறது. அதை மையமாக வைத்து தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் படம் மட்டி. இப்படத்தை டாக்டர் பிரக்பஹல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்திருக்கிறார். தமிழில் மட்டி என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் பற்றி இயக்குனர் பிரக்பஹல் கூறியதாவது: மட்டி இது அட்வென்சர் மூவி. எடிட்டர் சன்லோகேஷ், கே,ஜே,ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பசுருர் இசை அமைத்திருக்கிறார். இதுபடமாக்கப்பட்ட இடங்கள் கேரளா, தமிழ்நாட்டின் பார்டர். காட்சிகள் உண்மை சம்பவங்களாக படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் விபத்துக்கள் நடந்திருக்கிறது. சுமார் 15 ஜீப்கள் இதில் பந்தயத்துக்காக மேம்படுத்தி புதுப்பித்து பயன்படுத்தப்பட்டது. ஹீரோ தவிர உண்மையான மட் ரேஸர்ஸ் இதில் நடித்திருக்கின்றனர்.


ஹீரோவும் இதற்காக 2 வருடம் பயிற்சி எடுத்தார். இதுபோன்ற பந்தயாங்கள் பஞ்சாப், கேரளா போன்ற இடங்களில்பிரதானமாக நடக்கிறது. இந்த காட்சிகள் படமாக்கும்போது விபத்துக்கள் நடந்துள்ளது. கேமராமேன் ரதீஷ் கை எலும்பு முறிந்தது. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஜஸ்ட் மிஸ் என்று சொல்வதுபோல் மற்ற விபத்துக்களில் அதிஷ்டவசமாக தப்பித்தனர். இந்த படத்துக்காக இந்தியா முழுவதும் பூனா, டெல்லி போன்ற பல பகுதிகளுக்கு சென்று மட் ரேஸ்பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு இந்த ஸ்கிரிபட் தயாரித்தேன். இது 5 வருட உழைப்பு. இப்படியோரு படம் எடுக்க நிறைய சவால்கள் இருந்தது. அதை எல்லாம் எதிர்கொண்டு இப்படத்தை இயக்கினேன். இந்த படத்தில் எல்லாமே இந்தியன் டெக்னீஷியன்கள் பணியாற்றி உள்ளனர். என்னுடைய அசோசியேட் மட்டும் ரஷ்யாவிலிருந்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களுக்கு மேல் நடந்தது. ஜூன் மாதத்துக்குள் ரிலீஸ் திட்டமிடப்படுகிறது. இதில் ஹீரோ முத்து. இவர் மட்ரேஸ் பயிற்சியை 2 வருடம் பெற்றார். அனுஷா சுரேஷ் ஹீரோயின். இதில் இன்னும் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். குறிப்பாக மட்ரேஸ் போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் நடித்துள்ளனர். மட்ரேஸ் காட்சிகளை நானே அமைத்தேன். எல்லாவற்றுக்கும் ரிகர்சல் செய்யப்பட்டு அதன்பிறகு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
இவ்வாறு இயக்குனர் பிரக்பஹல் கூறினார். மட்டி படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.  பி ஆர் ஓ ரியாஸ் அஹமத் வரவேற்றார். பாரஸ் தொகுத்து வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.