ரசிகர்கள் ஆதரவால் பூர்ணா மகிழ்ச்சி

2

நடிகை பூர்ணாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டி உள்ளது. இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதையொட்டி வலைத்தளத்தில் பூர்ணா வெளியிட்டுள்ள பதிவில், “என்னை சமூக வலைத்தள பக்கத்தில் 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவு என்னை மேலும் கடினமாக உழைக்க தூண்டுகிறது.

என்னை உற்சாகப்படுத்தி ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள்தான் எனது பலம். அர்ப்பணிப்போடு தொடர்ந்து கடினமாக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். பூர்ணாவை சமீபத்தில் திருமண மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் படம் பேசும், அம்மாயி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்திலும் நடித்துள்ளார். நான்கு தெலுங்கு படங்கள், ஒரு மலையாள படம், ஒரு கன்னட படமும் கைவசம் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.