“உன் பார்வையில்” படம் குறித்து நடிகை பார்வதி நாயர் !

என் திரை வாழ்வில் சவாலான கதாப்பாத்திரம் 

1

இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடிக்கும் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.

அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு கதாப்பாத்திரத்தில், இயக்குநர் கபீர் லால் அறிமுக இயக்கத்தில் உருவாகும் “உன் பார்வையில்” படத்தில் நடித்துவருகிறார். அவர் கற்பனையே செய்திராத வகையில் இப்படத்தில் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் தன் சகோதரியின் கொலையாளியை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

படம் குறித்து நடிகை பார்வதி நாயர் கூறியதாவது…

மிகச்சிறந்த படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர் லால் அவர்களின் முதல் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படம் பற்றி மிகப்பெரும் தெளிவான பார்வை அவரிடம் உள்ளது. படம் மிகச்சிறப்பாக வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதிலும் இரட்டை வேடம், நாயகியை மையப்படுத்திய மிக சவாலான, அழுத்தமான பாத்திரம் செய்வது பெரும் பாக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்.

கணேஷ் வெங்கட்ராம் படத்தில் நாயகி பார்வதி நாயரின் கணவராக சைக்காலஜி மருத்துவராக முக்கியமானதொரு பாத்திரத்தில் நடிக்கிறார். பார்வதி நாயர் இப்படத்தில் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் மிக அழகாக வந்துள்ளது.

கணேஷ் குறித்து கூறும்போது, கணேஷ் ஒரு மிக அற்புதமான நடிகர் மேலும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தருபவர். ஒவ்வொரு காட்சியும் வெகு சிறப்பாக வரவேண்டுமென விரும்புவார். இயக்குநர் கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பாகவுள்ளது.

World Lovely Production நிறுவனம் தயாரித்து வரும் “உன் பார்வையில்” படம்,வரும் ஜூலை மாதம் வெளியிட திட்டமிடுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.