துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற அஜீத்குமார்..

0

46 வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் சாம்பியன் ஷிப் போட்டியில் நடிகர் அஜித்குமார் சென்னை ரைபிள் கிளப் பிரதிநிதியாக முன்னின்று 6 பதக்கங்களை வென்றார்.

ஏர் பிஸ்டல் 10 மீட்டர் (ஐ.எஸ்.எஸ்.எஃப்) அணி – தங்கம்
சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீட்டர் அணி – வெள்ளி
சென்டர் ஃபயர் பிஸ்டல் .32 (என்ஆர்) 25 மீட்டர் அணி – தங்கம்
ஸ்டாண்டர்ட் பிஸ்டல் .22 (ஐ.எஸ்.எஸ்.எஃப்) 25 மீட்டர் அணி – தங்கம்
ஸ்டண்டர்டு பிஸ்டல் .22 (என்ஆர்) 25 மீட்டர் அணி – வெள்ளி
ஃப்ரி பிஸ்டல் .22 (என்ஆர்) 50 மீட்டர் அணி – தங்கம்
என 4 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கம் என 6 மெடல்களை வென்றார்.
கடந்த மார்ச் 3 முதல் 5 நாட்கள் வரை போட்டிகள் நடத்தப் பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதுமிருந்து 900 துப்பாக்கி சுடும் வீரர்கள் பங்கேற்றனர்.


சென்னை ரைபிள் கிளப் செக்ரட்ரி ராஜசேகர் பாண்டியன் , செகரட்டரி ஜெனரல் ஆப் நேஷனல் ரைபிள் அசோசியேஷன், தமிழ்நாடு ஷூண்ட்டிங் அசோசியேஷன் செயலாளர் தமிழ்செல்வன் டி.ஜி.பி, ரவிகிருஷ்ணன், மற்றும் ஜாயின்ட் செகரட்டரி சென்னை ரைபிள் கிளப் கோபிநாத் ஜே.டி. ஆகியோ பதக்கங்களை வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.