திக்குறிச்சி சுகுமாரன் நாயர் நினைவஞ்சலி

0

 

இவர் ஒரு மலையாளத் திரையுலகில் பிரபலமான கதாநாயகன், குணச்சித்திர நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக 47 ஆண்டு காலம் கோலோச்சியவர்.

இவரது பூர்வீகம், பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகிலுள்ள திக்குறிச்சி என்னும் ஊராகும். 1956-க்கும் முன் இது கேரளாவுடன் இணைந்திருந்தது. 16.10.1916-இல் பிறந்து 11.3.1997-இல் 80-ஆவதில் மரணமடைந்தார்.

சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். 700-க்கும் மேலான திரைப்படங்களில் நடித்தவர். இவருக்கு 3 மனைவியர். 4 குழந்தைகள். இவரது பெற்றோர் சி.கோவிந்த பிள்ளை-என்.லக்ஷ்மி அம்மா.இவர் ஒரு சிறந்த எழுத்தாளர்.0 ஏராளமான புத்தகங்களும் எழுதியுள்ளார்.

இவரது சகோதரி எல்.ஓமன குஞ்ஞம்மா இந்தியாவின் முதல் நீதிபதியும் முதல் பெண் ஆட்சித் தலைவருமாவார்.

1950-இல் இவர் திரைத்துறையில் நுழைந்தார். 1951-இல் வெளிவந்த ‘ஜீவித நௌகா’ திரைப்படம் இவரது திரை வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கேரளத் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகவும் ஆக்கியது.

இவர் ஏராளமான படங்களுக்குப் பாடல்கள், திரைக்கதை எழுதியுள்ளார். அத்துடன் படங்களை இயக்கியுள்ளார்.

‘சுவாமி அய்யப்பன்’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை இவர் எழுதியதாகும். ‘சரியோ தெற்றோ’, ‘பூஜ புஷ்பம்’, ‘அச்சன்றே பார்யா’, ’பழிங்கு பாத்திரம்’, ’சரஸ்வதி’, ‘நர்ஸ்’, ‘ஊர்வசி பாரதி’ போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளி வந்தவையாகும்.

Leave A Reply

Your email address will not be published.