டெடி (பட விமர்சனம்)

1

படம்: டெடி
நடிப்பு: ஆர்யா, சாயிஷா, மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ்,
இசை: டி.இமான்
ஒளிப்பதிவு: யுவா
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா
இயக்கம்: சக்தி சவுந்திரராஜன்

உறுப்புகள் திருடும் கூட்டத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம். சாயிஷா  கடத்தும் ஒரு கும்பல் அவருக்கு அலளவுக்கு அதிகமாக மாத்திரைகள் கொடுத்து கோமாவிற்கு கொண்டு செறு சத்தமில்லாமல் கடத்துகிறது. ஆனாலும் சாயிஷாவின் உயிர் அவர்களிடமிருந்து தப்பிக்க என்ணுகிறது. அந்த உயிர் டெடி பொம்பை ஒன்றுக்குள் உழைந்துக்கொள்கிறது. காணாமல் போன் உடலை கண்டுபிடிக்க எண்ணும் டெடி ஆர்யாவின் உதவியை நாடுகிறது. அதற்கு உதவுகிறார் ஆர்யா. இருவரும் சேர்ந்து சாயிஷா உடலை தேடுகின்றனர். அவர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதற்கு வித்தியாசமாக பதில் சொல்கிறது டெடி.

கமர்ஷியல், ஆணவகொலை, காதல் படங்களுக்கு நடுவே  வித்தியாசமான கதை அமைப்புடன் வரும் படங்கள் கவனத்தை கவர்வதுபோல் டெடி படம் கவர்ந்திருக்கிறது. படம் தொடங்கியவுடனே டெடி எப்போது வரும் என்று குழந்தைகள் நச்சரிக்க தொடங்கிவிடுகின்றனர். இதிலும் அப்பாவியாக வந்து செல்வாரோ ஆர்யா என்று தோற்றத்தை பார்த்தால் எண்ண வைப்பவர் எதிரிகளுடன் அதிரடியாக மோதி எண்ணத்தை மாற்றிவிடுகிறார். வழக்காம அவரது ட்ரேட் மார்க் சிரிப்பு இ தில் மிஸ்ஸிங். கதாபாத்திரத்தை முறைப்பாக காட்ட இயக்குனர் கையாண்டிருக்கும் டெக்னிக்போல் தெரிகிறது. வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி. அவரது வசன உச்சரிப்பில் குரல் பக்கபலமாக இருக்கிறது.

சாயிஷா முதலில் சில காட்சிகள் பிற்பகுதியில் சில காட்சிகளில் தென்படுகிறார்., மற்றபடி அவர் பாத்திரம்தான் டெடியாக மாறி படம் முழுவதும் நடமாடுகிறது.  தத்ரூபமான டெடியின் காட்சிகள் ஆச்சர்ய மூட்டுகிறது. கருணாகரன், சதீஷ் சிரிக்க வைக்கின்றனர்.

யுவாவின் கேமிரா  டெடி என்றவுடன் வண்ணங்களை அள்ளி இறைத்திருக்கிறது..   டி.இமான் இசை காட்சிகளுக்கு உணர்வை ஊட்டுகிறது.

டெடி- ரசிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.