கணேசபுரம் (பட விமர்சனம்)

17

படம்: கணேசபுரம்
நடிப்பு: சின்னா, ரிஷா, ஹரிதாஸ், கயல் பெராரா, பசுபதி ராஜ், சரவணசக்தி, ஹலோ கந்தசாமி, டிக்டாக் ராஜ்பிரியன்,
இசை: ராஜா சாய்
ஒளிப்பதிவு: பி.வாசு
தயாரிப்பு: க.காசிமாயன்
இயக்குனர்: வீரங்கன். கே.

அந்த கிரம்மத்தில் உள்ளவர் எல்லோருமே திருட்டை தொழிலாக செய்பவர்கள். ஹீரோ சின்னாவும் அந்த கூட்டத்தை சேர்ந்தவர்.  நீ எந்த இடத்துக்கு போய்வேண்டுமானாலும் திருடு உனனை நான் காப்பார்றுகிறேன் என்று சொல்லும் கூட்டத் தலைவன். இந்தநிலையில் சின்னாவுக்கு காதல் மலர்கிறது. திருடுக்கு முழுக்கு போட்டு காதலியுடன் வலம் வருகிறார். இதற்கிடையில் ஊர் பஞ்சாயத்தில் ஊர் தலைவர் மீது சின்னா கைவைத்துவிட கோபம் அடையும் மகன் சின்னாவை கொல்ல திட்டமிட்டுகிறார். இதன் முடிவை படம் சொல்கிறது.

கிரம்மத்து படம் என்றாலே அத்தை மகள் காதல் என்ற பழையபல்லவியை பாடாமல் புதுவித களத்தில் கதையை எழுட்தி இருக்கிறார் சின்னா. இவர்தான் படத்தில் ஹீரோவாகவுய்ம் நடித்திருக்கிறார். கதை எழுதியவரே அந்த பாத்திரம் ஏற்றிருப்பதால் நடிப்பும் அவ்வளவு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. புதுமுகம் என்ற பயம் தெரியாமல் வேடத்தைல் வாழ்ந்திருக்கிறார் சின்னா.

ஹீரோயின் ரிஷா காதலுக்கு பயன்பட்டிருக்கிறார். சின்னாவின் நண்பர்களாக வருபவர்கள் கவனத்தை கவர்கின்றனர்.

இயக்குனர் வீரங்கன் கே படத்தின் கதையை உள்வாங்கிக் கொண்டு எதார்த்தமாக இயக்கி, படம்  ஒ கே தான்  என்று சொல்ல வைக்கிறார். ராஜா சாய் இசை அமைத்திருக்கிறார். எதார்த்தமான கதை என்பதால் அதன் சூழலுக்கு ஏற்ப இசை வழங்கி உள்ளார். ஒளிப்பதிவாளர் பி.வாசு காட்சிகளை கச்சிதமாக படமாக்கி இருக்கிறார்.

கணேசபுரம்- ஏமாற்றவில்லை.

 

 

Leave A Reply

Your email address will not be published.