பிரபுதேவாவின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்

3

தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி உள்ளனர். தேர்தல் ஆணையம் அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா தேர்தலுக்கான விளம்பர தூதராக இருந்து தேர்தல் விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி உள்ளார். இந்த பாடல் வலைதளத்தில் வைரலாகிறது.

பிரபுதேவா பாடி உள்ள பாடலில்,

“என்னத்துக்கு நோட்டு

எனக்கு ஒரு டவுட்டு

காச நீட்டி ஓட்டு கேட்கும்

ஆள ஆக்கு அவுட்டு

ஓட்டு நம்ம உரிமை

உணர்ந்து கிட்டா பெருமை

காச வாங்கி ஓட்டு போட்டா தீர்ந்திடுமா வறுமை” போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

‘100 சதவீதம் வாக்கு’

‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’

போன்ற விழிப்புணர்வு வாசகங்களும் பாடலில் இடம்பெற்று உள்ளது. 2019 பாராளுமன்ற தேர்தலிலும் இதுபோல் விழிப்புணர்வு பாடலை பிரபுதேவா பாடி இருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.