இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” ..

1

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல்  கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும்

ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு. எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி “மரபு” என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது.

இதில் விக்டர் ஹீரோவாக நடி,க்கிறார். இலக்கியா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆனந்த்பாபு, கருத்தம்மா ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கதை எழுதி தயாரித்து இயக்குகிறார் விக்டர் இமானுவேல். நிர்வாக தயாரிப்பு என்.ஜோதி. ஒளிப்பதிவு: வேல்முருகன். நடனம் அக்‌ஷட் ஆனந்த். ஸ்டண்ட்: ஜாகுவார் தங்கம்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.