தேசிய விருதை தட்டி வந்த எஸ்.தாணுவின் அசுரன் படமும் நடிகர்-தனுஷும்

2

67 வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அசுரன் சிறந்த படம் மற்றும் அப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகர் விருது உள்ளிட்ட தமிழ் திரையுலகுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

கலைப்புலி எஸ்,தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான படம் அசுரன். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். முற்றிலும் வித்தியாசமாக தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். அவர் சிறந்த நடிகருக்கன தேசிய விருது பெற்றார். (மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது). தனது மகனைக் காப்பாற்ற முயன்ற ஒரு தந்தையாக அசுரன் படத்தில் தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற் காக இந்த விருது அவருக்கு கிடைத்திருக்கிறது.
மேலும் சிறந்த தமிழ் படத்துக் கான விருதும் அசுரன் படத் துக்கு கிடைத்துள்ளது.


தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸில் திருநங்கை யாக விஜய் சேதுபதி நடித்தி ருந்தார். அவர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென் றார். விஜய்சேதுபதி பெறும் முதல் தேசிய விருது இதுவாகும்.


அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படத்தில் பாடல் ளுக்காக டி இமான் மனுக்கு சிறந்த இசைகாக விருது பெற்றார்.

நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் சோதனை முயற்சியாக ஒரே நடிகர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 சிறப்பு ஜூரி விருது வென்றது மற்றும் அப்படத்தின் ஒலி வடிவமைப்பாளரான ஆஸ்கார் விருது பெற்ற ரசுல் பூக்குட்டி சிறந்த ஆடியோகிராபி விருதை பெறுகிறார்.


மதுமிதா இயக்கிய கே.டி என்கிற கருப்பு துரை படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதைப் பெற்றார்.


மகேஷ் பாபுவின் தெலுங்கு திரைப்படமான மகரிஷி படத்திற்காக

 

சிறந்த நடன இயக்குனர் விருதை நடன இயக்குனர் ராஜு சுந்தரம் பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.