அசுரன் பட தேசிய விருது வெற்றி விழா: எஸ்.தாணு, தனுஷ், வெற்றிமாறன் மகிழ்ச்சி

3

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்த படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கினார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். இப்படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்ததுடன் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
தேசிய விருது பெற்றதையடுத்து படக் குழு மகிழ்ச்சியை கொண்டாடியது. சென்னை பிரசாத் லேபில் படக் குழுவினர் பத்திரிகை, மீடியாக்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத் தினர்.


இதில் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது:
வெற்றிமாறனை எனக்கு தனுஷ் அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் அவருடன் ஒரு படம் செய்யாலாமா என்று தனுஷ் கேட்டார். ஏற்கனவே வெற்றிமாறனுக்கு நான் ஒருமுறை அட்வான்ஸ் தொகை கொடுத்தி ருந்தேன். ஆனால் படம் தயாரிப்பது தாமதாமாகி வந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் என்னை சந்தித்து அட்வான்ஸ் பணத்தை வட்டியுடன் திருப்பி தர முன் வந்தார். ஆனால் நான் வாங்கவில்லை. இதை குறிப்பிடுவதற்கு காரணம் அவரது பொறுப்புணர்வு மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால்தான். பின்னர் அசுரன் படம் உருவானது. இப்படத்தின் எடிட்டிங் பணி நடந்தபோது அவருக்கு ஜூரம் வந்துவிட் டது. இதற்கிடையில் நான் பட ரிலீஸுக்கு நல்ல நேரமாக குறிப்பிட்ட தினம் பற்றி அவரிடம் சொன்னேன். அதில் ரிலீஸ் செய்துவிடலாம் என் றார். தான் சொன்ன அந்த ஒரு வார்த்தைக்காக தனக்கு ஜூரம் வந்ததை கூட பொருட்படுத் தாமல் படுத்துக்கொண்டே அசுரன் படத்தை எடிட்டிங் செய்தார். இப்படத்தில் தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது. அவரது கடின உழைப்புக்கும் நடிப்புக்கு மான விருது. இன்னும் நிறைய பிரிவில் இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். சிறந்த படம் என்பதை இப்படம் தேசிய விருது போட்டியில் முதல் சுற்றிலேயே உறுதி செய்து விட்டது.
என் தயாரிப்பில் வண்ண் பூக்கள் படம் இயக்கினார் பாலு மகேந்திரா. அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதன்பிறகு விருதுக்காகவே ஒரு கோடி செலவில் படம் தயாரித்தேன் விருது கிடைக்கவில்லை. நீண்ட வருடங்களுக்கு பிறகு பாலு மகேந்திராவின் சிஷியன் வெற்றிமாறன் மூலமாக அசுரன் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.
இவ்வாறு எஸ்.தாணு கூறினார்.


வெற்றிமாறன் பேசும்போது கூறியதாவது:
அசுரன் படம் உருவானது சுவாரஸ்யாமான விஷயம். தனுஷ் என்னிடம் வந்து தாணு சாருக்கு படம் செய்யவிருக்கி றேன் மற்றவர்களிடம் கேட் பதற்கு முன் உங்களிடம் கேட்கிறேன் ஏதாவது கதை வைத்திருக்கிறீர்களா என்றார். அப்போது பூமணி எழுதிய வெக்கை நாவல் கதையின் கருவான காட்டுக்குள் ஒரு மகன் சென்றுவிடுகிறான் அவனை தேடி தந்தை செல்கி றார் என்ற ஒரு வரியை மட்டும் கூறி, இப்போதைக்கு இதுதான் இருக்கிறது என்றேன். அடுத்த நொடி அவர் மகனாக நடிக்கப் போவது யார் என்றுதான் கேட் டார். மற்ற ஹீரோவாக இருந் தால் தந்தையாக நடிக்கப்போ வது யார் என்றுதான் கேட்டி ருப்பார்கள். இப்படித்தான் அசுரன் தொடங்கியது.
10 வருடத்துக்கு முன் ஆடு களம் படத்துக்கு விருது கிடைத்தது. அப்போது என் அலுவலகத்தில் உதவி இயக்குனர்கள் சத்தம்போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்கள். தற்போது அசுரன் படத்துக்கும் அதேபோல் மகிழ்ச்சி வெளிப்படுத்தினார் கள். எனக்கு ரொம்ப கோபம் வரும். என்னிடம் பணியாற்று வது எளிதான விஷயமல்ல. ஆனாலும் என் உதவியாளர்கள் அதைத் தாங்கிக்கொண்டு என்னுடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்கள் என் மீது வைத்தி ருக்கும் அன்புதான்.


அசுரன் படத்துக்கு முதலில் தேர்வானவர் கென் கருணாஸ் தான். பின்னர் தனுஷ் வந்தார் இப்படி நடசத்திரங்கள் இணைந்தார்கள். மஞ்சுவாரி யார் இணைந்தது, இதுவொரு குடும்பபடமாக உருவாவதற் கான வாய்ப்பாகவும் அமைந் தது. இந்த படத்துக்கு பின்னணி இசையும் 2 பாடல் களும் அமைத்த ஜி.வி.பிரகா ஷுக்கு தேசிய விருது கிடைக் கும் என்று எண்ணி னேன்.
தாணு சார் அசுரன் படம் ரிலீஸ் செய்ய தேதி குறித்ததுபற்றி கூறினார். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் படத்தை எப்படியெல்லாம் கொண்டு சென்று மக்களிடம் சேர்க்க முடியுமோ அப்படி சேர்த்தார். அடுத்த படத்தை நாம் இணைந்து செய்யும் போதும் நீங்கள் ரிலீஸ் தேதி குறியுங்கள் அதன்படி படத் தை முடிப்போம். விருது என்பது ஊக்கம் தருவதுதான். அதைவிட மக்களிடம் கிடைக்கும் பாராட்டுத்தான் உண்மையான விருது. அந்த பாராட்டு அசுரன் படத்துக்கு கிடைத்தது. ஒரு படத்தின் வெற்றி தனி ஒருவரை சார்ந்த தில்லை என்று எண்ணுபவன் நான். அது ஒரு கூட்டுமுயற்சி. அப்படியொரு கூட்டு முயற்சி யால்தான் அசுரன் விருது பெற்றிருக்கிறது. மேலும் இப்படத்துக்கு விருது கிடைத் தாலும் எனக்கு இந்த பயணத் தில் சந்தோஷமானதாக இல்லை. எனது படங்களில் டப்பிங் முதல் எல்லா விஷயத் திலும் என் பங்கு இருக்க வேண்டும் என்று எண்ணு வேன். ஆனால் அசுரன் படத் தில் என்னால் எல்லாவற்றி லும் ஈடுபட முடியவில்லை. அதற்கு காரணம் டெங்கு ஜூரம் வந்துவிட்டதுதான். என் குருநாதர் பாலுமகேந்திரா எப்போதும் சொல்வார். ஒரு நல்ல படம் தனக்கு வேண்டிய வற்றை தானே அமைத்துக் கொள்ளும் அந்த வகையில் அசுரன் கதையும் தனக்கு வேண்டியவற்றை தானே அமைத்துக்கொண்டது. இந்த படத்தில் கிடைத்த இன்னொரு திருப்தி இதுவொரு படமாக மட்டுமல்லாமல் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்துவ தாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதுவும் நடந் தது. கதையாக மட்டுமல்லாம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்று நூறு நாள் வெற்றி படமாகவும் அமைந்தது.
இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்கவில்லை. அவர் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கிருந்து வீடியோ கால் மூலம் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது தேசிய விருது கிடைத்ததற்கு மகிழ்ச்சி வெளியிட்டதுடன் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எஸ்.தாணு, பட குழுவினருக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ். எடிட்டர் ராமர், வசனகர்த்தா சுகா, நடிகர் நிதிஷ் வீரா, மூத்த பத்திரிகையாளர் தேவி மணி உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டனர். பிஆர் ஓக்கள் டைமண்ட் பாபு, ரியாஸ் அஹமத் வரவேற்றனர். பாரஸ் ரியாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.