கர்ணன் படத்தில் பாடல் வரி மாற்றம்

இயக்குனர் மாரி செல்வராஜ் அறிக்கை

2

தனுஷ் நடிக்கும் புதிய படம் கர்ணன்.  மாரி செல்வராஜ் இயக்குகிறார்.  கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.  இப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்றின்  வரியில் மாற்றம் செய்யப்பட்டிருக் கிறது.

இதுகுறித்து இயக்குனர் மாரி செல்வ ராஜ் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு :

அனைவருக்கும் அன்பின் வணக்கம்.

கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கி றது. ஒரு இளம் இயக்கு நரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக் கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங் களை பெரும் சிரத்தை யோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டது தான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத் தோடும் கலந்து காலத்தின் தேவதை களான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதற விட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்கு முறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்பது புரிந்து கொள்ள முடியாததாகவும் விலக முடியாததாகவும் இருக்கிறது. அதன் அடிப்படையில் பண்டாரத்தி புராணம் பாடலுக்கு ஏற்பட்டிருக்கும் விவாதத்தையும் வருத்தத் தையும் கோரிக்கை யையும் முடித்து வைப்பதற் காக இனி பண்டாரத்தியை மஞ்சனத்தி என்று அழைக் கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். தேவதைகள் எந்த பெயரில் அழைக்கபட்டா லென்ன … பெயர் மாறுவ தால் அவர்கள் காட்டும் மாட வெளிச்சம் குறைந்து விட போகிறதா என்ன? இனி ஏமராஜாவின் மாடவிளக்காக மஞ்சனத்தி இருப்பாள். இனி ஏமன் கர்ணனை ஆட வைப்பதற் காக மஞ்சனத்தி புராணத்தை பாடுவான் கர்ணன் ஆடுவான் . ஆதரவளித்த அனைவருக் கும் நன்றியும் ப்ரியமும் எப்போதும்…

காதலே பிரபஞ்ச மாடத்தின்
வெளிச்சம்.

இவ்வாறு மாரிசெல்வராஜ் கூறி உள்ளார்

Leave A Reply

Your email address will not be published.