ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதிய 99 சாங்ஸ் பட பாடல்..

சென்னையில் வெளியீடு..

2

இசை அமைப்பாளர் தமிழில் கே.பல்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்துக்கு இசை அமைக்கத் தொடங்கி பிறகு இந்தி, ஆங்கிலம் பெரிய உயரத்துக்கு சென்றார். மாநில மொழிப்படம் அளவில் இசை அமைக்கத் தொடங்கி உலக அளவில் ஹாலிவுட் படங் களின் இசை அமைப்பா ளராக மாறியதுடன் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் தட்டி வந்தார். அவர் முதன் முறையாக சொந்தமாக தயாரித்துள்ள படம் ’99 சாங்ஸ்’. அத்துடன் இப்படத்தின் கதையும் எழுதி உள்ளார். விஷ்வேஸ் கிருஷ்ண மூர்த்தி இயக்கி உள்ளார். ஏஹன் பட் ஹீரோவாக நடிக்கி றார். மேலும் எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

இசையால் வாழ்க்கையை இழந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இசை கலைஞனால் அந்த குடும்பத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரமுடி கிறது. அவனின் இசை பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது தான் கதை. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் ஷங்கர்,

கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர்ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், ஜிவி பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி னார்கள்.

விழாவில் ஏ.ஆர் .ரஹ்மான் பேசும்போது கூறியதாவது:

சினிமாவில் இசை அமைப் பாளராக அறிமுகமானேன். பிறகு மும்பைக்கு சென்றேன். அங்கே வெற்றி பெற்றேன். பின்னர் அமெரிக்கா சென் றேன். அங்கு பல வருடங்கள் பணியாற்றினேன். அப்போது ஒரு இயக்குனர் உங்களிடம் கதை இருக்கிறதா என்று கேட்டார். என்னிடம் அப்போது என்னிடம் கதை இல்லை. பிறகு கதை எழுத முடிவு செய்தேன். அதற்காக எழுத்தாளர்களை கவனித்து பயிற்சி எடுத்தேன். அதன் பிறகு எழுதியதுதான் 99 சாங்க்ஸ்.

இது என்னுடைய சொந்த கதை என்கிறார்கள். நிச்சயமாக இல்லை, நான் எழுதிய கதை. எல்லோர் வீட்டிலும் நடக்கிற கதைதான். ஒரு அம்மா தன் பிள்ளையை உயரத்துக்கு கொண்டு போகிற கதை தான். மூன்று நான்கு வருடங்களாக இந்த கதை எழுதினேன். இதில் நடிப்ப தற்கு 750 பேர் வரை ஆடிஷ்ன் நடத்தினேன். அதன் பின்னரே தேர்வு செய்தேன். ஏஹன் பட் தேர்வா னார். இசை சம்பந்தமான கதை என்பதால் அவரை ஒரு வருடம் இசை கற்க அனுப்பி வைத்தேன். அதன்பிறகே சினிமாவில் நடிக்க வைத் தோம். சிலரை பார்த்தவுடன் பிடிக்கும் அதுபோல் இந்த கதைக்கு பொருத்தமாக ஏஹன் இருப்பார் என்று பார்த்தவுடன் பிடித்தது.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.