நடிகை ரோஜாவுக்கு ஆபரேஷன் :நலமுடன் உள்ளார்

ஆர். கே செல்வமணி தகவல்

3

பெப்சி தலைவரும் திரைப்பட இயக்குனரும், ஆந்திரா எம் எல் ஏ நடிகை ரோஜாவின் கணவருமான ஆர். கே. செல்வமணி ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ரோஜாவுக்கு கடந்த ஆண்டே ஒரு ஆபரேஷன் நடக்கவிருந்தது. கொரோனா தொற்று காலம் என்பதால் ஆபரேஷன் தள்ளிப்போடப்பட்டது.
தேர்தல் முடித்த பிறகு தற்போது ஆபரேஷன் நடத்த எண்ணியிருந்த நிலையில் அது தாமதமாகிவிடும் என்பதால் தற்போது அவருக்கு ஆபரேஷன் நடத்தி முடிக்கப்பட்டது. ரோஜா நலமாக இருக்கிறார். அவரை ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் தற்போது யாரும் சந்திக்க வரவேண்டாம். அதுபற்றி நான் தகவல் தெரிவிக்கிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் ரோஜா நலமாக உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு
ஆர் கே செல்வமணி கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.