இந்தியில் வெளியாகும் சூர்யாவின் சூரரைப்போற்று..

0

 

சூர்யா நடித்து OTT தளத்தில் மிகபிரமாண்ட வெற்றி பெற்ற படம், 2D entrainment “சூரரை போற்று”. இத்திரைப்படம் முதல் முறையாக Amazon Prime நிறுவனம் மூலம் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிடு கிறார்கள்.

சூர்யா நடிப்பில், மிக பிரமாண்ட தயாரிப்பாக கடந்தாண்டு Amazon Prime ல் வெளியான திரைப்படம் “சூரரை போற்று”. நட்சத் திர அந்தஸ்து கொண்ட, பிரபல முன்னணி நடிகர் நடிப்பில் டிஜிட்டலில் நேரடியாக வெளியான முதல் படமாக இப்படம் சாதனை படைத்தது.

இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில், சூர்யா மாறுபட்ட வேடத்தில் நடிக்க, இந்திய விமானதுறையில் சாதனை படைத்த கோபிநாதின் வாழ்க்கை வரலாற்றை மையப் படுத்தி உருவான படம் தான் “சூரரை போற்று”. கதை சொல்லல், காட்சிய மைப்பு, நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என அனைத்து துறைகளிலும் பிரமாதப்படுத்தியிருந்தது. எதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தி ருந்தார் சூர்யா. விமர்சகர் களிடமும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. டிஜிட்டலில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட மாக சாதனை படைத்தது.

Amazon Prime ல் வெளியான இப்படம் உலக அளவில் பார்வையாளர் களை ஈர்த்து, பல திரை விழாக்களிலும் பங்கு கொண்டது. உலக அளவில் மதிக்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இப்படம் இடம்பிடித்து சாதனை படைத்தது. தென்னிந்தியாவிலும் உலக அளவிலும் கிடைத்த வரவேற்பினை அடுத்து, Amazon Prime நிறுவனம் இப்படத்தினை இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து, வரும் ஏப்ரல் 4ஆம் தேதி தனது தளத்தில் வெளியிடுகிறது. Amazon Prime தளத்தில் முதல் முறையாக ஒரு தமிழ் படம் இந்தி மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியா வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.