மண்டேலா (பட விமர்சனம்)

42

படம்: மண்டேலா
நடிப்பு: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி
தயாரிப்பு: ஒய் நாட் ஸ்டுடியோ, எஸ்,சசிகாந்த், ரிலையன்ஸ் எண்டர் டெயின் மெண்ட், விஷ்பெரி பிலிம்ஸ், ஒப்பன் விண்டோ புரடக்‌ஷன் பாலாஜி மோகன்
இசை: பரத் சங்கர்
ஒளிப்பதிவு: வித்யூ அய்யண்ணா
இயக்கம்: மடோன்னே அஸ்வின்
ரிலீஸ்: ஏப்ரல் 4ம் தேதி 2021 ஸ்டார் விஜய் டிவி,
ஏப்ரல் 9ம் தேதி முதல் நெட்ப்ளிக்ஸ்

சூரக்குடி குக்கிராமத்தில் ஊர் தலைவர் தேர்தல் நடக்கிறது. சங்கிலி முருகன் ஊர் தலைவராக இருக்கிறார். அவருக்கு உடல் நலம் பாதிப்பதால் அவரது இரண்டு மகன்கள் தலைவர் பதவிக்கு போட்டி யிட முடிவு செய்கின்றனர். இருவரும் கீறியும் பாம்புமாக சீறுகின்றனர். எதற்கெடுத்தாலும் போட்டி என மோதிக்கொள்கின் றனர். தேர்தலில் தங்கள் ஆதரவாளர்கள் சமமாக இருப்பதால் ஒரு ஓட்டு அதிக கிடைத்தால் வெற்றிவாய்ப்பு என்ற நிலை ஏற்படுகிறது. அந்த ஒரு ஒட்டுக்கு சொந்தக்கர ராக இருக்கிறார் யோகி பாபு. அவரது ஓட்டு பெற சங்கிலி முருகன் மகன்கள் பணத்தை தண்ணீராக அவருக்கு செலவு செய் கின்றனர். பணம் ஒரு பக்கம் சேர்ந்தாலும் தனது வாக்கை யாராவது ஒருவருக்கு செலுத்தி னால் மற்றொரு குரூப் அவரை வெட்டி கொன்று விடும் சூழல் ஏற்படுகிறது. இதன் முடிவு என்ன என்பதை பரபரப்புடன் கூறுகிறது மண்டேலா.

யோகிபாபு நூற்றுக் கணக்கான படங்களில் நடித்தாலும் அவருக்கு பேர் சொல்லும் படம் ஒன்றாக மண்டேலா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கனமான  கதாபாத்திரத் தை தனது கனமான தோற்றத்தைக்கொண்டு எளிதாக செய்துவிட்டு செல்கிறார். தன்னை ஒரு மனிதனாகவே எண்ணாமல் வாய்க்கு வந்தபடி இளிச்சவாயன் ஸ்மைல்,  பூச்சாண்டி என எப்படி பெயர் சொல்லி அழைத்தாலும் அந்த கிராம மக்களுக்கு மளிகை சாமான் வாங்கி தருவதுமுதல் சிகை அலங்காராம் செய்வது வரை எந்தவித வெறுப்பும் காட்டாமல் பணிவிடை யாக செய்வது யோகிபாபு கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது.

தபால் ஆபிசில் சேமிப்பு கணக்கு ஆரம்பிக்க சென்று தனது பெயரே தெரியாது என்று சொல்லி வெடிசிரிப்பை வரவழைக் கிறார். அவருக்கு தபால் ஆபிஸ் அலுவலர் ஷீலா ராஜ்குமார்  நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டியதும் கதையில் சூடு பிடிக்கிறது.

ஊர் தலைவர் தேர்தலில் மோதிக்கொள்ளும் ஜி.எம்.சுந்தர் மற்றும் ரவி ஒரு ஓட்டுக்காக நீயா நானா என எல்லா சொத்தையும் இழக்க தயாராவதும் எப்படியா வது யோகிபாபுவின் ஒரு ஓட்டை தனக்கு பெற வேண்டும் என்று இருவரும் துடியாய் துடிப்ப தும் அவர்களின் பதவி மற்றும் பணத்தாசையின் கோர முகத்தை காட்டு கிறது, இருவரில் யார் எதை கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்ய முடிய வில்லை என இருவரையும் யோகிபாபு தொங்கலில் விடுவது காமெடி.

தபால்காரராக வரும் ஷீலா ஆங்காங்கே சமூக சீர்கேட்டை காரி உமிழ்கிறார். கிராமத்தில் நடமாடும் மற்ற எந்த கதாபாத்திரமும் வீண் இல்லை.  சங்கிலி முருகன் மகன்களாக வரும் ஜி.எம். சுந்தர்,  கண்ணா ரவி டஃப் பைட் தருகின்றனர்.

சாதி பிரச்சனையை  அரசியல் சாயத்துடன் மிக்ஸ் செய்து கலந்து அடித்திருக்கிறார் இயக்குனர் அஸ்வின்.

இசையும் ஒளிப்பதிவும் ஓவராகிவிடாமல் கதையை தெளிவாக நகர்த்த உதவியிருக் கிறது.

மண்டேலா – தேர்தல் படிப்பினை.

Leave A Reply

Your email address will not be published.