அமேசான் பிரைமில் புனித் ராஜ்குமார் நடித்த யுவரத்னா சிறப்பு காட்சி

27

அமேசான் ப்ரைம் வீடியோ புனீத் ராஜ்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் தனஞ்சயா
ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான அதிரடி திரைப்படமான
யுவரத்னாவின் டிஜிட்டல் சிறப்புக் காட்சியை அறிவித்தது

சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த திரைப்படத்தை ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார், மற்றும் இதில் புனீத் ராஜ்குமார், சாயீஷா, சோனு கௌடா, தனஞ்சயா, மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்

யுவரத்னா திரையரங்குகளில் வெளியான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங் களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம்

அமேசான் ப்ரைம் வரம்பற்ற ஸ்டீமிங்க் மூலம், சமீபத்திய மற்றும் பிரத்யேக சிறப்புத் திரைப்படங்கள், டிவி தொடர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள், அமேசான் ஒரிஜினல்கள், அமேசான் ப்ரைம் மியூசிக் மூலம் விளம்பரங்கள் இல்லாத இசை ஆகியவற் றை அளிப்பதோடு,, மிகப்பெரிய அளவிலான எண்ணிக்கையில் உள்ள இந்திய தயாரிப்புகளை விரைவாகவும் இலவசமா கவும் விநியோகிக்கிறது. முதல் தரமான சலுகை களை எளிமையாக அணுகும் வசதி, ப்ரைம் ரீடிங் மூலமாக வரம்பற்ற வாசிப்பு, மற்றும் ப்ரைம் கேமிங் மூலம் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், இவை அனைத்தையும் வருடத்திற்கு ரூ.999 உறுப்பினர் சந்தா மூலம் நம்பமுடியாத அளவு மதிப்புமிக்க சேவைகளை அளிக்கிறது.

ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கு சந்தா செலுத்தியும் வாடிக்கை யாளர்கள் யுவரத்தினா வை காணமுடியும். ப்ரைம் வீடியோ மொபைல் எடிஷன் மொபைலுக் கென்றே உருவாக்கப்பட்ட தனிநபர் பயன்பாட்டுத் திட்டம், அது தற்போது ஏர்டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

மேசான் ப்ரைம் வீடியோ இன்று பிரதியேக ஸ்ட்ரீமிங் சேவைகளில் அதிரடி கன்னட திரைப் படமான, யுவரத்தினா வின் டிஜிட்டல் சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது. யுவரத்னா, கல்லூரி வளாகத்தின் பின்னணியில் மனித மதிப்பீடுகள் குறித்து விளக்கும் ஒரு கதை. சந்தோஷ் ஆனந்த்ராம் எழுதி இயக்கி ஹோம்பேல் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ் விஜய் கிரகந்தூர் தயாரித் துள்ள இந்த ‘யுவரத்தினா’’ என்ற திரைப்படத்தில், சாயீஷா, தனஞ்சயா, திகந்த் மஞ்சாலே, சோனு கௌடா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள் ளனர். யுவரத்னா திரையரங்குகளில் வெளி யான ஒரே வாரத்தில் இந்தியா மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தி யங்களைச் சேர்ந்த ப்ரைம் உறுப்பினர்கள், ஏப்ரல் 9, 2021 முதல் ஸ்ட்ரீம் செய்து பார்த்து மகிழலாம் கல்வி அமைப்பை தனியார்மய மாக்கும் அரசியல் தொடர்பு களால் மூடப் படும் நிலைக்குச் செல்லும் ஒரு புகழ்பெற்ற கல்லூரி யைச் சுற்றி யுவராத்னா வின் கதைக்களம் அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வர் தனியார்மயமாக்கலுக்கு எதிராகப் போராடுகிறார். ராஷ்ட்ரகுடா பல்கலைக் கழகத்தில் ஒரு பொறி யியல் மாணவனாகச் சேரும் அர்ஜூன் அதாவது புனீத் ராஜ்குமார், அவரது இயக்கத்துக்கு ஆதரவாக இருக்கிறார். 

அதன் பின் என்ன நடந்தது? அவர்களது முயற்சியில் அவர்கள் வெற்றி காணுவார்களா? பல மயிர்க்கூச்செறியும் சம்பவங்கள் நிறைந்த நிக்ழ்வுகளை ஏப்ரல் 9 அன்று தொடங்கும் யுவரத்னாவின் அமேசான் டிஜிட்டல் வெளியீட்டில் காணலாம்.

அமேசான் ப்ரைம் வீடியோ கன்டெண்ட் இயக்குனரும் தலைவருமான விஜய் சுப்ரமணியம், தனது எண்ணங்களைப் பகிந்துகொண்ட பொழுது கூறினார், “பல்வேறு கலைவடிவங்கள், மொழிகள் ஆகியவற்றின் மிகச்சிறந்த பொருளடக்கங்களை வழங்குவதற்கு, அமேசான் ப்ரைம் வீடியோ எப்போதுமே நாட்டிலுள்ள மிகச்சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் கூட்டு சேர்வதில் முனைப் போடு செயல்படுகிறது. ஹோம்பேல் ஃபிலிம்ஸ் உடனான எங்கள் உறவு தொடர்வது குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அமேசான் ப்ரைம் வீடியோவின் வரிசையில் ஏற்கனவே உள்ள எழுச்சியூட்டும், குதூகல மான கன்னட திரைப்படங்களோடு கூடுதலாக இணையும் ஒரு தரமான திரைப்படம் யுவரத்னா. திரையரங்கு களில் மிகப்பெரிய வெற்றிகளை இந்தத் திரைப்படம் குவித்திருக் கிறது மற்றும் இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிட்டப்பட்ட சில நாட்களிலேயே எங்களது உலகளாவிய பார்வை யாளர்களிடம் கொண்டு செல்வது குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியோடிருக் கிறோம்.”

“ஒரு இயக்குனரின் கண்ணோட்டத்திற்கு எவ்வாறு உயிர் கொடுப்பது என்பதை புனீத் ராஜ்குமார் நன்கு அறிவார் மற்றும் அவருடன் பணியாற்றுவது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கும் செயல்பாடு என்பதற்கு அது ஒன்றே காரணமாகத் திகழ்கிறது. யுவரத்னாவின் வெற்றி யைத் தொடர்ந்து அவருடன் மற்றொரு மிகப் பெரிய வெற்றித் திரைப்படத்தை உருவாக்குவதில் நான் மிகவும் உணர்ச்சிபூர்வ மாக இருக்கிறேன்” என்று இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கிய சந்தோஷ் ஆனந்த்ராம் கூறினார். “ கதை மற்றும் அதன் பொருளடக்கத்துக்குப் பொருத்தமான திரை நட்சத்திரங்களின் கூட்டம் தொடங்கி இந்தப்படத்தில் எதிபார்க்கக்கூடிய பல அம்சங்கள் இருக்கின்றன. திரையரங்குகளில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை மேலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தோடு பகிர்ந்து கொள்ள விரும்பினோம். அதன் மூலம் அனைவரும் அவர்களது இல்லத்தில் அமர்ந்து கொண்டே இந்த திரைப்படத்தை ரசிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த டிஜிட்டல் வெளியீடு அற்புதங்களை நிகழ்த்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதிரடி, உணர்வுகள், சிரிப்பு மற்றும் கொஞ்சம் காதல் ஆகிய உணர்ச்சிக் கலவையோடு இந்த திரைப்படம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.”

இந்த டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட இதன் முன்னணி கதாநாயக நடிகர் புனீத் ராஜ்குமார், கூறினார், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்தோஷ் ஆனந்த்ராம் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவது, சொந்த வீட்டிற்கு திரும்பியது போன்ற உணர்வைத் தருகிறது. இந்தத் திரைப்படம் தொடர்புடைய முக்கியமான நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது, நகைச்சுவையான அதிரடி உரையாடல்கள், அதிதீவிரமான சண்டை காட்சிகள் மற்றும் மனதை உருக்கும் சம்பவங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரமாக இது விளங்குகிறது. இதன் இமாலய வெற்றியை எங்களது முழு தயாரிப்புக் குழுவிடமும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். அமேசான் ப்ரைம் வீடியோவின் உலகளாவிய ரசிகர்களுக் கான டிஜிட்டல் வெளியீட்டை காண ஆவலோடு காத்திருக்கி றேன்.”

“அமேசான் ப்ரைம் வீடியோவில் யுவரத்னாவை வெளியிட ஹோம்பேல் பிலிம்ஸ் தயார் நிலையில் உள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சிய டைகிறேன்” என்று தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறினார், “தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையில், இந்த மிகக்சிறந்த திரைப் படத்தை மிகப்பெரிய எண்ணிக்கையில் ரசிகர்களை குறிப்பாக குடும்பங்கள் மற்றும் மூத்த வயதினரைச் சென்றடையச் செய்வதை யும் கருத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. ரசிகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் எங்களது நலம் விரும்பிகள் அனைவரது ஆதரவையும் நாங்கள் வேண்டுகிறோம். “‘யுவரத்னாவிற்கு” அளித்த பேராதரவுக்கு நான் அனைத்து ரசிகர்களுக்கும் அத்தோடு இந்தத் திரைப்படத்தை மேலும் அதிக ரசிகர்களைச் சென்றடைய உதவிய அமேசான் ப்ரைம் வீடியோவிற்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். யுவரத்னா வின் வலிமையை காண்பதற்கும் உணர்வ தற்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!”

Leave A Reply

Your email address will not be published.