அன்பு தம்பி விவேக்கை இழந்துவிட்டேனே.. நடிகர் பிரபு உருக்கம்..

0

நடிகர் விவேக் இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபு தெரிவித்துள்ள இரங்கலில், ’அன்பு தம்பியை இழந்து விட்டேன்’ என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரபு கூறிய தாவது:
தம்பி விவேக் மறைந்து விட்டார் என்று நினைக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அவருடைய குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. நமக்கே ஆறுதல் சொல்லிக்கொள்ள முடியவில்லையே… நல்ல மனிதர், திறமையான கலைஞன். எவ்ளோ படங்கள் தம்பி விவேக்குடன் நடித்திருக் கிறேன். குறிப்பிட்டு சொல்லப் போனால் பொழுது விடிஞ்சாச்சு மிடில்கிளாஸ் மாதவன் இப்படி பல படங்கள்.
ஷூட்டிங் வரும்போதெல் லாம் பேப்பர்களை படித்துக்கொண்டிருப்பார். அவரிடம், ’இந்த பழக்கம் உண்டா?’ என்றேன். அண்ணே அன்னன்னிக்கு என்ன பிரச்னை இருக்கிறதோ அதை வசனத்தில் சொல்லலாம் என்றார். அதுபோல் சமூக பிரச்னைகளை நகைச்சுவை யோடு மக்களுக்கு எடுத்துச் சென்று சேர்த்தவர் விவேக். அருமையான கலைஞனை இழந்துவிட்டோம். அருமை யான நண்பரை இழந்து விட்டேன். ஒரு அருமையான தம்பியை நான் இழந்துவிட் டேன். எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரிய வில்லை. ரொம்ப ஷாக்காக இருக்கிறது. என்னிடம் போனில் அடிக்கடி பேசுவார் . அண்ணே எப்படி இருக்கீங் கன்னு கேட்பார். அன்பான ஒரு தம்பி, அவர் இழப்பை நம்மாலேயே தாங்கமுடிய வில்லையே அந்த குடும்பத் தார் எப்படி தங்குவார்கள். திரையுலகம் இருக்கும் வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துக்கொண்டுதான் இருப்பார். என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்.
இவ்வாறு பிரபு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.