மறைந்த விவேக் வாழ்க்கை குறிப்பு

0

நடிகர் விவேக் நிஜப்பெயர் விவேக் அனந்தனன். தென் காசி மாவட்டம் பெருங் கோட்டூர் கிராமத்தில் 1961ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்தவர்.
மனதில் உறுதி வேண்டும் என்ற படம் மூலம் நகைச் சுவை நடிகராக அறிமுக மானார். புதுப்புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், ஆர்த்தி எடுங்கடி, கேளடி கண்மணி, நண்பர்கள், ரன், சாமி, ஐஸ், விசில், குருவி, படிக்காதவன், சிங்கம் என 250க்கும் மேற் பட்ட படங் களில் நடித்திருக்கிறார். கடைசியாக தாராள பிரபு படத்தில் நடித்தார்.

விவேக் சினிமாவில் நகைச் சுவையோடு பல்வேறு பகுத்தறிவு சிந்தனைகளையும் வெளிப்படுத்தி வந்தார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று அழைத்தனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத். விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட எல்லா பிரபல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் விவேக். ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். விவேக்கிற்கு 59 வயது ஆகிறது.
நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த விவேக் அவரது பெயரில் 1 கோடி மரங்கள் நடும் முயற்சி யை மேற்கொண்டு வந்தார். பல லட்சம் மரங்கள் நட்ட ருக்கிறார்.
விவேக் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அவர் இன்று 17 ஏப்ரல் 2021) அதிகாலை 4.45 மணிக்கு மரணம் அடைந்த தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விவேக், அமிர்ந்தநந்தினி என்பவரை மணந்தார். இவரகளுக்கு 3 பிள்ளைகள். அதில் ஒரு மகன் கடந்த 2015ம் ஆண்டு 13வது வயதில் மூளை காய்ச்சலால் மரணம் அடைந்தார்.
விவேக் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.